தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தென்கரை தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு கடை மற்றும் பேட்டரி கடைகளின் பூட்டை நேற்று இரவு உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இரும்பு கடை கல்லாவில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதர கடைகளின் ஷட்டரை உடைக்க முடியாததால் கொள்ளையடிக்காமல் விட்டுச் சென்றுள்ளனர். கடைகளின் பூட்டை உடைப்பதற்கு முன்பாக கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்தது, கேமராக்களை ஆய்வு செய்த போது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.