மனைவி செல்லில் 'சகலகலா லீலைகள்'.. பார்த்த நொடியே அதிர்ந்து போன கணவன்

Update: 2023-08-08 12:47 GMT

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், ஆந்திராவில் சட்டக் கல்வி படித்துக் கொண்டிருந்தபோது, உடன் படித்த திருமணமான மதுரையை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்கள் செல்ல செல்ல, இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பிக்கவே, கணவனுக்கு தெரியாமல் அந்தப் பெண் செந்தில்குமாருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணிடமே குடும்பம் நடத்த நினைத்த செந்தில்குமார், கணவர் இளங்கோவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால், அவரை விட்டு தன்னிடம் வந்திடுமாறு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். மனைவியின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்க்கும்போது, தனது மனைவி செந்தில்குமாருடன் தகாத உறவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோபத்தை கட்டுப்படுத்திய இளங்கோவன், மனைவியிடம் இதுகுறித்து எதுவும் கேட்காமல், செந்தில்குமாரை பழிவாங்க நினைத்துள்ளார்.

அதன் பின்னர் செந்தில்குமார் யார் என்பது குறித்து விசாரிக்கத் தொடங்கிய இளங்கோவன், பெண்கள் விவகாரத்தில் செந்தில்குமார் பலவீனமானவர் என அவருக்கு தெரியவந்துள்ளது.

அதன்படி, ஹனிடிராப் மூலம் பழிவாங்க நினைத்த இளங்கோவன், அதற்கு ஆயுதமாக தனக்கு பழக்கமான ஸ்ரீதேவி என்ற பெண்ணை பயன்படுத்தினார்.

இந்த ஸ்ரீதேவி மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக ஸ்ரீதேவி செந்தில்குமாரை நாடி, அவருடன் நெருக்கமாக இருப்பது போல் பழகியுள்ளார்.

அதனை பயன்படுத்திக் கொண்ட இளங்கோவன், தாங்கள் கூறும் இடத்திற்கு செந்தில்குமாரை கொண்டு வர ஸ்ரீதேவியிடம் கூறியுள்ளார். அதன்படி, செந்தில்குமாரை சந்தித்த ஸ்ரீதேவி, அவருடன் தியேட்டரில் படம் பார்த்துள்ளார்.

அதன் பின்னர், இருசக்கர வாகனத்தில் இருவரும் அஸ்தம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இளங்கோவன் கூறிய இடம் வரவே, திடீரென ஸ்ரீதேவி வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் எனக்கூறி, அங்கிருந்த கடைக்குள் தேவி சென்றுள்ளார்.

அப்போது, திடீரென செந்தில்குமார் அருகே கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்த இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், காரில் இருந்து இறங்கி, பட்டப்பகல் என்றும் பாராமல், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் காரில் அவரை தூக்கிபோட்டு அந்தக் கும்பல் கடத்திச் சென்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செந்தில்குமார் காரில் கடத்திச் செல்லப்படுவதை போலீசார் பார்த்துள்ளனர். பின்னர் விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த காரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது, காரில் இருந்த மற்றவர்கள் தப்பிய நிலையில், இளங்கோவனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தலைமறைவாக இருந்த சிக்கந்தர், ஆனந்த், சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய நபரான ஸ்ரீதேவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கிட்னாப், ரன்னிங், சேஷிங் என சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம், போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்