நூதனமுறையில் மனு கொடுக்க வந்த வழக்கறிஞர்.. குறி கேட்ட பாட்டியம்மா | Thoothukudi |
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில், நூதன முறையில் மனு கொடுக்க வந்தவரை, சாமியார் என நினைத்து மூதாட்டி ஒருவர் ஆசீர்வாதம் வாங்கினார். கந்துவட்டி சட்டத்தை கடுமையாக்க கோரி, காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அய்யாசாமி என்பவர் சிவப்பு ஆடை அணிந்து பால்குடம் எடுத்தபடி நூதன முறையில் மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்...