விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனமல் தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார்.ஈஞ்சார் கிராமத்தில் உள்ள செந்தட்டி அய்யனார் குலதெய்வ கோவிலுக்கு படந்தாளை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, கனமழையால் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தரமூர்த்தியின் தம்பி மாரீஸ்வரன் காயம் அடைந்தார். கோவில் வளாகத்தில் இருந்த வெள்ள நீரில் சிக்கி தவித்த, அவரை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப்பின்
தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.