வேலை வாங்கி தருவதாக ஆசை வலை விரித்த பெண்... நம்பி ஏமாந்து குமுறும் மக்கள்

Update: 2024-08-25 10:38 GMT

வாணியம்பாடியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஜெயந்தி என்பவர், ஆயுள் காப்பீடு செய்தால் வேலை கிடைக்கும் என கூறி, சுமார் 3 லட்சம் ரூபாய் குடியாத்தம் பகுதியை சேர்ந்த உத்திரகுமாரிடம் வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து உத்திரகுமாரின் சகோதரி உள்ளிட்ட சிலரிடம் பணம் பெற்று ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்த்து சம்பளம் வழங்கியுள்ளார். தொடர்ந்து சம்பளம் வழங்காததால் சந்தேகமடைந்த உத்திரகுமார் உள்ளிட்டோர், ஜெயந்தியின் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்