அசால்ட்டாக இருந்த கடைக்காரர்கள்.. கண்முன்னே நொறுக்கிய அதிகாரிகள்

Update: 2024-11-14 09:06 GMT

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை குறுகியதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள 76 ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைதுறை சார்பில் நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத கடைகளை ஜேசிபி மூலமாக இடித்து அகற்றினர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்