தட்டிக்கேட்டதால் ..ஆள் கூட்டி வந்து காவலர் வீட்டை சூறையாடிய கும்பல்- சேலத்தில் பரபரப்பு
ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி எலத்தூரைச் சேர்ந்த ரவி-ராஜாத்தி தம்பதியின் மகன், ஈரோடு மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ்- சரோஜா தம்பதியின் மகளை திருமணம் செய்து கொண்டார்.
இரு வீட்டாரும் அதே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், சரோஜாவின் சகோதரர் ராமன் அடிக்கடி காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இதையறிந்த ரவி, ராமனை கண்டித்ததுடன் இந்த தவறுகளால் தனது மகன் பாதிக்கப்பட நேரிடும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ராமனும், சரோஜாவும் பத்துக்கு மேற்பட்ட ஆட்களுடன் வந்து, வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டு விட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பத்து நாட்களுக்கு முன்பு தீவட்டிபட்டி காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலரின் தந்தைக்கே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக ரவி வேதனையுடன் கூறியுள்ளார்.