திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பகீர் சம்பவம் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2024-11-10 02:13 GMT

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூரில் 7 நாட்களில்13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விழாவிற்கு 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சி நாளில் கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 செல்போன்கள் திருட்டு போய்யுள்ளன. 3 இருசக்கர வாகனமும், 15 சவரன் நகைகளும் திருடு போய் உள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கைவரிசை காட்டியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்