அனல் பறக்கும் 3ம் கட்ட பணி - தோண்ட.. தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள் - இதுவரை அறியாத புதிய தகவல்கள்

Update: 2024-11-08 10:49 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாய்வில் 6 ஆயிரம் பழமையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...

விஜய கரிசல் குளம் 3ம் கட்ட அகழ்வாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையில் சுடு மண் பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன... இந்நிலையில் சமீபத்தில் தற்போது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர், சார்ட் எனும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கற்களை நுண் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். மேலும் இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்