போலீசாரிடம் வம்பு.. தனக்கு தானே ஆப்பை செதுக்கி வைத்த இளைஞர்.. அடுத்து நடந்த அட்ராசிட்டி தான் ஹைலைட்

Update: 2024-11-09 13:40 GMT

ஈரோட்டில், சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை இளைஞர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் தவிர, மற்ற தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இ​ந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கட் என்பவரை நிறுத்தி அபராதம் விதிக்க, போக்குவத்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கட், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்ற இருசக்கர வாகனங்களை மறிக்க தொடங்கினார். இதனையடுத்து நோ-என்ட்ரி, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஹெல்மெட் அணியாதது ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்