ஈரோட்டை நடுங்க வைத்த பயங்கர சம்பவம்... காதலனுடன் சென்ற சிறுமிக்கு நடந்த கோரம்

Update: 2024-11-08 12:58 GMT

ஈரோடு மாவட்டம் தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுனில், சோலார் பேனல் பொருத்தும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து வந்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சுனிலின் விலையுயர்ந்த இரு சக்கரவாகனத்தில் பர்கூர் மலைப்பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இருவரும் சென்றுள்ளனர். அப்போது ஊசிமலை பகுதியில் சென்ற போது திடீரென இரு சக்கரவாகனம் நிலை தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் சுனில் லேசான காயத்துடன் தப்பி இருக்கிறார், ஆனால் சிறுமிக்குக் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பர்கூர் போலீசார் சுனிலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி சென்று சிறுமி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்