பாலியல் குற்றவாளிகள் உடம்பில், மைக்ரோ சிப் பொருத்தி, அவர் எங்கு செல்கிறார் என்று காவல்துறை கண்காணித்தால், குற்றங்கள் நடைபெறும் முன்னே தடுக்கலாம் என்று, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன் புதூரில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறை வருடம் முழுவதும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.