கரூரில் களமிறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி | V. Senthil Balaji | Thanthitv
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். கோடங்கிபட்டி மற்றும் காக்காவாடி பகுதியில் அமைய உள்ள சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். காக்காவடியில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்யது ஆடை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொழிற்சாலையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பச்சை நிற பாட்டில்களை தவிர்க்க வேண்டும் எனவும், பாட்டில்களில் பிவிசி லேபிள்களை தவிர்த்தால் மறுசுழற்ச்சி செய்வதற்கு வசதியாக இருக்கும் என ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.