ஜோடியாக வந்து அலறவிட்ட தம்பதி.. சென்னையை உறைய வைத்த சம்பவம்

Update: 2024-11-09 16:47 GMT

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கணவன் மனைவியை, போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 2 வது தெருவைச் சேர்ந்த 80 வயதான மூதாட்டி பாப்பம்மாள், தனியாக வசித்து வருகிறார்.அவர் வீட்டின் கதவை சாத்தாமல் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருவர் வீட்டுக்குள் நுழைந்து, பாப்பம்மாள் முகத்தை மூடி, தங்க சங்கிலியை அறுக்க முயன்றனர். அப்போது, மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர், ஒரு பெண் உட்பட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணவன்,மனைவி தங்கராஜ் மற்றும் ஜெயந்தி என தெரியவந்து. ஜெயந்தியின் சகோதரி பாப்பம்மாள் வீட்டில் வசித்த நிலையில், கடந்த மாதம் வீடு காலி செய்து விட்டார். இதனால் மூதாட்டி பாப்பம்மாள் தனியாக வசித்து வருவது நினைத்து திருட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்