“இறந்தும் நிம்மதியில்லா நிலை..“ - இடுப்பளவு தண்ணீரில் இறுதி ஊர்வலம்.. - மனதை உலுக்கும் வீடியோ

Update: 2024-11-11 06:34 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே, இறந்தவரின் உடலை, ஆற்றுக்குள் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பான் ஓடை ஆற்று வாய்க்காலை கடந்து, சுடுகாடு மற்றும் மயானம் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஆற்றுக்குள் இறங்கி, இடுப்பளவு தண்ணீரில் சிரமத்துடன் சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றனர். இந்நிலையில், புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்