மனு கொடுக்க வந்த பெண் வயிற்றை பார்த்து கலெக்டருக்கு வந்த சந்தேகம் -ஆபரேஷன் செய்து அதிர்ந்த டாக்டர்ஸ்
ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். மகா அப்பிலேஷ் பேகம் என்பவர் மனு அளிக்க வந்த போது வயிறு வீங்கியிருந்ததை பார்த்த ஆட்சியர், அவரை பரிசோதிக்க உத்தரவிட்டார். பின்னர் மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வயிற்றில் இருந்து 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது.