ஒரே நாளில் மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை பொருட்கள்.. அதிகாரிகள் நடத்திய கிடுக்குப்புடி விசாரணை
சிவகங்கை மாவட்டம்,மதகுபட்டி அருகே
காவல்துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.ஒரு காரில் சோதனை செய்த போது,
அதில் இருந்த 400 பண்டல் அளவிலான தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை பாக்கெட்கள், 60 பண்டல் கூலிப் புகையிலை, 120 பண்டல் விமல் புகையிலை, 60 பண்டல் வி ஒன் புகையிலை என மொத்தமாக 110 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை
கடத்தி வந்த கருப்பச்சாமி என்பவரை கைது செய்தனர்.