புத்தாண்டன்று மகளை பற்றி தந்தைக்கு வந்த அதிர்ச்சி போன் கால் .3ஆம் தேதி பறிபோன சிறுமியின் உயிர்

Update: 2024-01-09 12:40 GMT

கோவையில், 15 வயது சிறுமியின் இறப்பில் சந்தேமிருப்பதாக கூறி பெற்றோர் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தீத்திபாளையத்தை சேர்ந்த சத்யபிரியா எனும் சிறுமி காளம்பாளையத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றாம் தேதி பணிக்கு சென்ற சத்யபிரியாவுக்கு விபத்து நேர்ந்ததாக சிறுமியின் தந்தைக்கு மணிகண்டன் என்பவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். செல்லப்ப கவுண்டனூர் பகுதியில் விபத்து நேர்ந்ததாகவும், சிறுமியுடன் மணிகண்டனும், தருண் என்பவரும் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சத்யபிரியா கடந்த 3-ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகமிருப்பதாக பேரூர் போலீசாரிடம் பெற்றோர் புகாரளித்தனர். ஆனால் உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை என குற்றம்சாட்டிய சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகாரளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்