மக்கள் செய்த செயல்...வேர்த்து வெலவெலத்து போன அதிகாரிகள் - பரபரப்பில் சேலம்
சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், காமலாபுரம் பகுதியில் நில அளவீடு பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நிவாரணம் அறிவிக்காமல், பயிர்கள் விளைந்து வரும் நிலத்தில் கால் வைக்க கூடாது. மீறி இறங்கினால் த*கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றுள்ளனர்.