கோயிலை தரைமட்டமாக்கி பிள்ளையார் சிலையை JCB-யில் எடுத்து சென்ற அதிகாரிகள் - கொந்தளித்த மக்கள்
சேலம் மாவட்டத்தில் சாலையோர கோயிலை இடித்து சாமி சிலையை எடுத்து சென்ற நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேட்டூர் அருகே மாதையன்குட்டை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்து வந்தது. இந்த கோயிலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயிலை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி கோயிலை இடித்த அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலம் பிள்ளையார் சிலையை எடுத்து சென்றனர். அப்போது ஒன்று கூடிய பொதுமக்கள் சிலையை எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளரின் பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.