சேலத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபுவின் வீட்டில் அடுத்தடுத்து வருமான வரித்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில், பாமக வேட்பாளர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சேலம் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு, பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், குரங்குசாவடி சாஸ்தாநகர் பகுதியில் உள்ள சுரேஷ் பாபு வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில், எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து, வருமான வரித்துறையினர் அந்த இடத்தை விட்டு சென்றனர்.