சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கழிப்பறை கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக கூறிய பயணிகள், சுத்தமில்லாத கழிப்பறையை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக கூறினார்கள். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தற்காலிக கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.