கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.84,000 ஊக்கத்தொகை.. ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2025-01-11 02:07 GMT

உலகின் பல நாடுகளில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு 84 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என ரஷ்யாவின் Karelia பகுதியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவில் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு முதல் ரஷ்யாவில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்