சினிமா பாணியில் கொள்ளையடித்த பெண் "மலிவு விலையில் தங்கம் மிரட்டல் விடுவதால் கண்ணீருடன் கதறும் மக்கள்
ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண், தங்கம் கிராமுக்கு 1000-க்கு கொடுப்பதாக பொது மக்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பி கூலி வேலை செய்வோர், வியாபாரிகள் என பலரும் தங்களது சேமிப்பை முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர் கொடுத்த பணத்திற்கு தங்கத்தை வழங்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பணத்தை கட்டிய பலரும் தங்களுக்கு சேர வேண்டிய தங்கத்தை கேட்ட போது, சசிகலா மிரட்டும் தோணியில் பேசியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்தனர். முன்னதாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.