கீரை கூட்டு சாப்பிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ.. மக்களே உஷார்

Update: 2024-09-15 14:36 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வாங்கிய உணவில் புழுவை கண்டு உறவினர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு, அருகில் உள்ள பிரபல உணவகத்தில் உறவினர்கள் சாப்பாடு வாங்கியுள்ளனர். இதில், சாப்பாடை சாப்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி, கீரைக் கூட்டில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்