பெண் எஸ்ஐ மீது அத்துமீறியதாக கூறி பாஜக நிர்வாகி நள்ளிரவு கைது | Ramanathapuram | BJP Executive
ராமநாதபுரத்தில் இருந்து மகளிர் அணி சார்பில் கேணிக்கரை பகுதியில் இருந்து சென்ற பாஜகவினரை போலீசார் வழிமறித்து தடுத்து கைது செய்தனர். இதனால், பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக மாவட்ட ஆன்மீக பிரிவு செயலாளர் சண்முகநாதன், பெண் சார்பு ஆய்வாளர் ஒருவர் மீது கை வைத்து தள்ளியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நள்ளிரவு சண்முகநாதனை கைது செய்தனர். ஆனால், போலீசார் இழுத்ததாலேயே சார்பு ஆய்வாளர் மீது அவரது கைப்பட்டுள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தெரிவித்துள்ளார். போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.