பொங்கல் ரிலீசில் பின்வாங்கிய விடாமுயற்சி திரைப்படம்

Update: 2025-01-01 12:15 GMT

பொங்கலுக்கு ரிலீசாக இருந்த விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, புத்தாண்டில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...

2024ல் அஜித் பட ரிலீஸ் இல்லாமல் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு, ட்ரீட்டாக அமைந்தது விடாமுயற்சி படம்...

லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வந்தது...

அள்ள அள்ள குறையாமல், படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் குறித்து அப்டேட்டுகளை படக்குழு அள்ளித்தெளிக்க, குஷியில் இருந்தனர் அஜித் ரசிகர்கள்...

அதிலும் 10 வருடங்கள் கழித்து அஜித், த்ரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கேங், விடாமுயற்சி படத்திலும் ஒன்று சேர..ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது..

அண்மையில், சவடீகா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை வைப் ஆக்கியது..

இது மட்டுமன்றி, படத்தின் அப்டேட்டின் போதே படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது...

இதனால் படம் வெளியீடு குறித்து வைப் மோடில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு, பேரிடியாய் விழுந்தது லைகா நிறுவனத்தின் அறிவிப்பு.

முதலில் டிரெய்லர் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்பட்ட நிலையில், அறிக்கை ஒன்றை வெளியாகி அதிர்ச்சி தந்தது..

புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னதோடு சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என இருந்தது அந்த அறிக்கையில்...

இதுவரை படத்தின் விநியோக உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் Breakdown திரைப்படத்தின் உரிமையை படக்குழுவினரால் தற்போது வரை வாங்க முடியவில்லை எனவும் காப்புரிமை பிரச்சினையால் தான் பட வெளியீட்டில் தாமதம் நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களோ, 1ஏமாற்றத்துடன் புலம்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்