கடலூர் மாவட்டம் வேப்பூரில், பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக, பா.ஜ.க. தொண்டர்கள் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வெடித்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், தொண்டர்களிடம் இருந்து அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கந்தன், சாமிதுரை உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.