விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில், மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்குவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.