நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் வாழை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு ஆண் யானை ஒன்று, கால்கள் முழுவதும் சேற்றில் சிக்கிக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தது. 20 நாட்களுக்கு முன்பு புத்தூர் வயல் அருகில் உள்ள பாக்கு தோட்ட புதரில் சிக்கி ஒரு காட்டு யானை இறந்தது. பின்னர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உணவைத் தேடி வந்த காட்டு யானை ஒன்று, பாக்கு மரத்தை சாய்க்கும் போது, மின்கம்பியில் உயிரிழந்தது. ஒரே மாதத்தில் அந்த பகுதியில் மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.