எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் என்ற நூலினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். கலைஞர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பயண நூல், திரைக்கதை வசனங்கள், திரையிசை பாடல்கள், நெஞ்சுக்கு நீதி, உரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பு இந்த நூலில் உள்ளது. இந்திய அளவில் புகழ்பெற்ற 19 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.