ஒரு ஜோடி செருப்புக்கு விலை உயிரா? பள்ளியில் பெரும் சோகம்.. நண்பர்கள் நிற்க துடித்து நின்ற மூச்சு

Update: 2024-08-25 10:18 GMT

ஒரு ஜோடி செருப்புக்கு விலை உயிரா?

பள்ளியில் நடக்க கூடாத பெரும் சோகம்

சுற்றி நண்பர்கள் நிற்க துடிதுடித்து நின்ற மூச்சு

நாமக்கல்லில் காலணியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதாக எழுந்த பிரச்சினையில்...இரு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

செருப்புக்காக அடித்துக் கொண்டது சிறுபிள்ளைத் தனமாகத் தெரிந்தாலும்...அந்த விளையாட்டுத் தனம் ஒரு உயிரையே குடிக்குமளவு விபரீதமாகி விட்டது...

நாமக்கல் மாவட்டம்...வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...

11ம் வகுப்பு படிக்கும் நவலடிபட்டியைச் சேர்ந்த ஆகாஷின் செருப்பை யாரோ எடுத்து ஒளித்து வைத்துள்ளனர்...

இது தொடர்பாக சக மாணவர் ஒருவருடன் சண்டை எழவே... வாய்த்தகராறு கைகலப்பாக முற்றியுள்ளது...

ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில், மாணவர் ஆகாஷ் மயங்கி விழுந்துள்ளார்...

பதறிப்போன சக மாணவர்கள் உடனடியாக விஷயத்தை ஆசிரியர்களின் காதுகளுக்குக் கொண்டு சேர்க்க...அவர்கள் வந்து பார்த்தபோது ஏதோ வலிப்பு வருவதைப் போல் இருந்ததாம்...

உடனடியாக ஆகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்...

இச்சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தினார்...

பெற்றோர்கள் புகாரளிக்காததால் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் போலீசார் தவித்தனர்...

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஆகாஷின் தந்தை ரமேஷ் எருமபட்டி காவல்நிலையத்தில் டி.எஸ்.பி ஆனந்தராஜிடம் புகார் மனு அளித்தார்...

அப்போது மாணவனைத் தாக்கிய சக மாணவர், கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது...

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி பள்ளிக்கு வருகை தந்து சம்பவம் குறித்து விசாரணை அதிகாரியிடம் கேட்டறிந்தார்...

இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆகாஷின் உடலைக் காண வந்த ஆசிரியர்களை சூழ்ந்து கொண்ட உறவினர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது..

இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

சமீப காலமாகவே மாணவர்களுக்கிடையே நிகழும் மோதல் போக்கால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவது பெற்றோர்களைக் கவலையடையச் செய்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்