சுந்தர ராஜ பெருமாள் தைலக்காப்பு உற்சவம்.. கடல் போல் திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் | Madurai
மதுரை அழகர் கோவிலில் சுந்தர ராஜ பெருமாளுக்கு தைலக்காப்பு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சுந்தரராஜ பெருமாள் அதிகாலையில் மலை உச்சியில் இருக்கும் ராக்காயி கோயிலுக்கு பள்ளக்கில் புறப்பட்டார். அங்கு அவருக்கு வாசனை தைலம் தடவி, புனித நீராடப்பட்டது. பின்னர், மீண்டும் சுந்தர ராஜ பெருமாள் தனது இருப்பிடத்திற்கே வந்தடைந்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.