"அடிக்கிற வெயிலில் மதமா முக்கியம். மனிதாபிமானம் தான் முக்கியம்." செய்கையால் குளிர வைத்த இஸ்லாமியர்
சித்திரைத் திருவிழாவில் வெயிலில் தகிக்கும் பக்தர்களுக்கு 30 வருடங்களுக்கும் மேலாக ரோஸ்மில்க் வழங்கி வருகிறார் இஸ்லாமியர் ஒருவர்... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது... இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் பக்தர்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் மேலமாசி வீதியில் செயல்படும் தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ் சங்கம் சார்பில் அதன் நிர்வாகியான சலீம் முகமது 30 வருடங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கி வருகிறார். சித்திரைத் திருவிழா மதங்களைக் கடந்த சமூக நல்லிணக்க திருவிழா எனவும், பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சலீம் முகமது பூரித்தார்...