20 கிலோ கஞ்சா போதை LSD-யின் 0.1 கிராமில்... மிரட்டும் கும்பல்... சென்னை போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

Update: 2024-02-22 09:58 GMT

20 கிலோ கஞ்சா போதை இதன் 0.1 கிராமில் - நிறமும் கிடையாது, சுவையும் தெரியாது...போதை உலகை மிரட்டும் பயங்கரம் - சென்னை போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

அதிக நேரம் இணையதளம் பயன்படுத்துபவர்களையும், அடிக்கடி ஆன்லைனில் பொருள்கள் ஆர்டர் செய்பவர்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதன் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஜெர்மனி நாட்டு அதிகாரிகளுடன் கைகோர்த்து ஆதாரங்களை திரட்டி வரும் சென்னை போலீசார்...

சென்னை விமான நிலையத்தின் சோதனை வளையத்தை பலப்படுத்தி... சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் பெரும் மாஃபியா கும்பலுக்கு செக் வைத்து அதிரடி காட்டி வரும் அதிகாரிகள்...அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையில் 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்...

யார் அவர்கள் ?... அவர்களின் பின்னணி என்ன?

சமீபகாலமாக போதைப் பொருள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போலீசார், போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தும் வருகின்றனர்.. இந்நிலையில், இக்கும்பல் வேறு ஒரு பரிணாமத்தில் தங்களின் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர்...

அதாவது இந்திய தபால் துறை கண்களில் மண்ணை தூவி ஜெர்மனியை சேர்ந்த போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்து.. 'டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, நாடு முழுவதும்,எல்.எஸ்.டி., எனும், போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்து வருவது தெரியவர சென்னை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிர்ந்து போயினர்...

அது என்ன எல்.எஸ்.டி., எனும், போதை 'ஸ்டாம்ப்'... அரவிந்தன், போதைப் பொருள் தடுப்பு அதிகாரி

"எல்.எஸ்.டி., எனும், போதை 'ஸ்டாம்ப்' "

"இதற்கு நிறமும் கிடையாது, சுவையும் இருக்காது"

"இதனை பயன்படுத்துபவர்களை கண்டறிவது அரிது"

"போதை ஏற்றுவதற்கு இதன் மைக்ரோ கிராம் அளவே போதுமானது"

இந்த டார்க்நெட் என்னும் இணையதளத்தை பயன்படுத்தி கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தத்ரூபாக காட்சிப்படுத்தியிருக்கும் வேளையில், அந்த வெப்சைட் வாயிலாகவே தற்போது இந்த கும்பல் ஊடுருவிருக்கிறது...

20 கிலோ கஞ்சா கொடுக்கும் போதையை, இந்த எல்.எஸ்.டி என்னும் போதை ஸ்டாம்ப்பின் 0.1 கிராம் கொடுக்கும் என கூறும் அதிகாரிகள், இதனை உட்கொண்டால் கடும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரிக்கையும் விடுக்கின்றனர்...

அரவிந்தன், போதைப் பொருள் தடுப்பு அதிகாரி

"இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் உயர்ந்து மாரடைப்பு ஏற்படும்"

"மூளையின் செயல்பாட்டு திறனை சிதைக்கும்"

இதனிடையே, இந்த போதை ஸ்டாம்பை பயன்படுத்துபவர்களை கண்டறிவது கடினம் என்றும், ஆல்கஹாலை போன்று வாசனையை வைத்தும் செயல்பாடுகளை வைத்தும் கண்டறிய முடியாது என கூறிய அதிகாரிகள்....

ஜெர்மனியில் இருந்து டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, தபால் மூலம் கடத்தி... நாடு முழுவதும், எல்.எஸ்.டி., எனும், போதை ஸ்டாம்ப்பை கும்பல் விற்பனை செய்த இந்த சம்பவத்தில், பாலிவுட் துணை இயக்குநர்கள், மென் பொறியாளர்கள் உட்பட 15 பேரை அதிரடியாக, போதை பொருள் தடுப்பு பிரிவுகள் அதிகாரிகள் கைது செய்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4343 ப்ளாட்ஸ்களை முடக்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்