தந்தை இல்லை...நனவானது ஒரு தாயின் லட்சியம்... தான் பிறந்த மருத்துவமனையிலேயே டாக்டரான பெண்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்து அதே மருத்துவமனையில் சேவையாற்றி அசத்துகிறார் பெண் மருத்துவர் ஒருவர்.
முருங்கைக்காடு பகுதியில் வசிப்பவர் பானு... இவரது கணவர் உடல் நலமில்லாமல் 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்... தனது 2 மகள்களான புவனேஷ்வரியையும் சாந்த லட்சுமியையும் கைத்தறி கூலி வேலை செய்து வளர்த்து ஆளாக்கினார் பானு... இவரது இளைய மகள் சாந்த லட்சுமி தற்போது மருத்துவராக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று பணியில் சேர்ந்துள்ளார். சாந்தலட்சுமி இதே மருத்துவமனையில் 1995ல் பிறந்தவர்... குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தற்போது மருத்துவராகி அசத்தியுள்ளார்... அவருக்கு சக மருத்துவர்களும் ஊர் மக்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.