கோவை ஹாஸ்பிடலில் அடித்து கொலை..மருத்துவமனை மீது இன்னொரு பகீர் புகார் - வழக்கில் புதிய திருப்பம்

Update: 2024-05-31 10:14 GMT

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீது குட்டை ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு என அடுத்தடுத்து புகார்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.சம்பந்தப்பட்ட மருத்துவமனையில், கோவை காந்தி நகரை சேர்ந்த ராஜா என்பவர் இரும்பு பைப்பை திருட வந்ததாக கூறி அடித்து கொலை செய்யப்பட்டார். கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மருத்துவமனையின் துணைத் தலைவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் குட்டை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதில் கழிவு பொருட்களை தொடர்ந்து கொட்டி வருவதாகவும் கோவை காவல்துறை ஆணையர் அலுவகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தனது கணவருக்கு சொந்தமான நிலத்தை மருத்துவமனை நிர்வாகம் அபகரித்திருப்பதாக பெண் ஒருவர் புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், இரு குற்றச்சாட்டு குறித்தான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகார் குறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்