வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்...
மளிகை தோப்பு, மக்கான், ஏ கஸ்பா, பி கஸ்பா, வளையல் கார தெரு, கரீம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் வீதி வீதியாக சென்று அவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்... திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்... அப்போது அவருக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்... பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய கதிர் ஆனந்த், ஆம்பூரில் 350 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள், சாலைகளைத் திமுக அரசு அமைத்து உள்ளதாகத் தெரிவித்தார்... நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததாக குற்றம் சாட்டிய கதிர் ஆனந்த், எப்போதும் சிறுபான்மையினருக்கான அரசு திமுக அரசு மட்டும் தான் என தெரிவித்தார்... அத்துடன், இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் தானும் ஒருவர் என பிரச்சாரத்தின் போது கதிர் ஆனந்த் குறிப்பிட்டார்...