தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்.. சிக்கிய கனரக வாகனங்கள்.. பொது மக்கள் கடும் அவதி

Update: 2024-05-21 12:45 GMT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சர்க்கஸ் கூடாரம் நீரில் மூழ்கியது. சர்க்கஸ் கூடாரத்திற்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கிய நிலையில், அதில் ஆண்கள், பெண்கள் என 12 பேர் சிக்கி தவித்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சர்க்கஸ் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள கட்டடத்தில் தங்க வைத்து உணவு வழங்கினர்.

வெள்ளத்தில் மூழ்கி பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் சர்க்கஸ் தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்