கர்ப்பமாகாமல் திடீரென தாயான பெண்? - வீட்டில் கேட்ட குழந்தை சத்தம் - அதிர்ந்த ஊர் மக்கள்

Update: 2024-06-08 08:12 GMT

தகாத உறவு மூலம் தன் தோழி பெற்றெடுத்த குழந்தையை, தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டெடுத்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கிரைசைனியின் வீட்டில் பச்சிளம் குழந்தை இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். விசாரணையில், தான் பெற்ற குழந்தைதான் என கிரைசைனி தெரிவித்ததால் ஊர்மக்கள் போலீசில் புகாரளித்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், தனது தோழி ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து குழந்தை பெற்றெடுத்ததாகவும், அந்த குழந்தையை சில நாட்கள் வைத்திருக்கும்படி தன்னிடம் ஒப்படைத்தாகவும் கிரைசைனி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக குழந்தையை மீட்டு குழந்தை நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்த நிலையில், கிரைசைனியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்