தகாத உறவு.. மீண்டும் அழைத்து.. பஸ் ஸ்டாண்டிலே பதம் பார்த்த கள்ளக்காதலி..

Update: 2024-11-14 08:43 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, கட்டிட பணிகள் செய்யும் நபரை கொலை செய்ய முயற்சித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளை,புல்லுவிளையை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிட பணிகளை செய்து வந்த போது, கருப்பசாமி என்பவரின் மனைவி பழனியாச்சியுடன் பிறழ் உறவில் இருந்து வந்தார். இருவரும் அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்த நிலையில், ஈஸ்வரன் பழனியாச்சியை பிரிந்து நாகர் கோயிலில் உள்ள தனது தாயார் வீட்டில் வசிக்க தொடங்கினார். அவரை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பழனியாச்சி அழைத்ததாகவும், இதற்கு ஈஸ்வரன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் வாழ மறுத்த ஈஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்த பழனியாச்சி, அவரை வடசேரி பேருந்து நிலையத்திற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த ஈஸ்வரனை, 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இளைஞர்களை ஏவிய பழனியாச்சியும், வெட்டிய இளைஞர்களும் தலைமறைவாக இருந்த நிலையில், தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, பாபாநாசம் பகுதியில் பழனியாச்சி தங்கியிருப்பதாக தகவல் வந்த நிலையில், அங்கு சென்ற தனிப்படை போலீசார் பழனியாச்சியை கைது செய்தனர். தற்போது, கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 இளைஞர்களும் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்