"`நம்பர் 1' ஹாஸ்பிடல் இதுதானாம் பாருங்க..." - தீயாய் பரவி பகீர் கிளப்பிய வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஐயப்பன் என்பவர், சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்ற வார்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லை என வீடியோவை பகிர்ந்து ஆதங்கப்பட்டுள்ளார்.