சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுத்த Bad நியூஸ் | Kanniyakumari

Update: 2024-11-13 13:39 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக தொடர்கிறது. சிற்றாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, மக்களின் நலன் கருதி, அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து பாயும் தண்ணீரின் அழகை ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்