வெட்டுக்காயங்களுடன் குளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தாமரைக் குளத்தில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், முதுகுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கல் கட்டப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டனர். தலைப் பகுதியிலும் வெட்டுக் காயங்கள் இருந்த நிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.அப்பகுதியில் மோப்ப நாய் மூலம் தடயங்களை சேகரித்த போலீசார், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருவதுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.