என்ட்ரி கொடுத்த அதிகாரிகளை ஊர் எல்லையிலேயே தடுத்த கிராம மக்கள்.. பரபரப்பில் கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர்பாளையத்தில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட, இடம் தேர்வுசெய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால் பழைய நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து, அதே இடத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்ட மக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.