ரூ.2L-க்கு தமிழக இளைஞர்கள் விற்பனை இருட்டு அறை.. எலக்ட்ரிக் ஷாக் சித்திரவதை இந்தியர்களின் ரூ.10,000 கோடி குளோஸ் வெளிநாட்டு வேலை ஆசையா..? இந்த பகீர் செய்தி உங்களுக்குதான்

Update: 2024-09-14 07:34 GMT

வெளி நாட்டு வேலை கை நிறையச் சம்பளம் என கனவுகளோடு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நடந்த பகீர் சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

வேலை செய்யவில்லை என்றால் மின்சாரம் பாய்ச்சி கொடுமை..சொந்த ஊர் செல்ல வேண்டும் எனக் கூறினால் இருட்டு அறையில் அடைத்து வைத்து சரமாரியாகத் தாக்கியும் கொடுமை ...கேட்டாலே மனம் பதற வைக்கும் கொடுமைகளை நடத்துவது யார்..?

வெளி நாடு சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம், பல்ல கடிச்சிகிட்டு ஒரு வருஷம் இருந்த போதும் நிறையக் காசு சேர்த்திடலாம் என்று கணக்குப்போடும் இளைஞர்கள் தான் மோசடி கும்பலின் முதல் டார்கெட்.

"ஏஜெண்ட் மற்றும் சமூக வலைதளம் மூலம் தேர்வாகும் இளைஞர்கள்" "கால் சென்டர், டேட்டா என்ட்ரி வேலை என கூறு வார்கள்" "பெரும்பாலன இளைஞர்கள் இங்கு இருந்து தான் சென்றுள்ளனர்"

அங்குச் சென்ற பின் இளைஞர்களை அவர்களுக்குத் தெரியாமல் வேறு ஏஜெண்ட்களிடம் இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். இதன் பின் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கே எட்டாதவை..

சட்டவிரோத சைபர் க்ரைம் குற்றங்களை செய்யச் சொல்லும் கும்பல்

ஹைடெக் கால் சென்டர் போல் இருக்கும் அந்த உலத்தில் ஒவ்வொருவருக்கும் சமூக வலைதளத்தில ஃபேக் ஐடி கொடுக்கப்படும். அதன் மூலமாக பலருடன் ஆரம்பத்தில் நட்பு பாராட்டி அடுத்து நாம் யோசிக்காத வழிகளில் பிறரை ஏமாற்றி, மிரட்டி, ஆபாசப் படங்களை அனுப்பி பணப்பறிப்பில் ஈடுபட வேண்டும் இது தான் வேலைக்குச் சென்ற இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் டார்கெட்.

இது மட்டுமல்லாமல் சைபர் குற்றங்கள் அனைத்து இந்த இளைஞர்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

நவீன முறையில் கொள்ளையடிக்கும் இந்த வேலை செய்ய வில்லை என்றால் அந்த இளைஞர்களுக்கு நடக்கும் கொடுமை கற்பனைக்கு எட்டாதது.

"வேலை செய்யாதவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும்"

"அப்பா, அம்மா உயிரிழந்தால் கூட சொந்த நாட்டிற்குச் செல்ல விடமாட்டார்கள்"

"வேறு ஒருவரை வேலைக்குச் சேர்த்து விட வேண்டும்"

"தங்களை விடுவிக்க பல லட்சம் கொடுக்க வேண்டும்"

இப்படி சித்திரவதை செய்யப்பட்டு சட்ட விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 120 இளைஞர்களை லாவோஸ் நாட்டிலிருந்தும் கம்போடியா நாட்டிலிருந்து 60 இளைஞர்கள் என மொத்தமாக 180 இளைஞர்கள் தூதரகம் மூலமாக மீட்கப்பட்டு இருக்கின்றனர்.

இவர்களால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியர்களிடம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார் சென்னை, மதுரை என ஒன்பது மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்ட் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்..

இதே போன்று தமிழகத்தில் இருந்து சென்ற 1285 இளைஞர்கள் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்க நமது அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்