விவசாயிக்கு ED நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்... பின்னணியில் கொலை வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர்..?
ஆத்தூர் பாஜக பிரமுகர் குணசேகரன் என்பவர் மீது
கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகள் இவர் மீது உள்ள நிலையில், இதில் நான்கு வழக்குகள் நீதிமன்றவிசாரணையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டு வழக்குகள் காவல் நிலைய விசாரணையில் உள்ளதாகவும், வனத்துறை சார்பிலும் மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கரிய கோயில் காவல் நிலையத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் குறித்த வழக்கும் குணசேகர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது