டெல்லி அணிக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பு.. கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட லக்னோ அணி
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோவை டெல்லி வீழ்த்தியதால், 14 புள்ளிகள் பெற்ற டெல்லி, புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இதன்மூலம் பிளே ஆஃப் செல்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பை டெல்லி அணி தக்கவைத்து கொண்டது. லக்னோ அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் முடிவால், நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுறறுக்கு தகுதிபெற்றது.