"பிறந்த மூன்றே நாளில் அறுவை சிகிச்சை"..."ஓங்கி அழுத்திய மருத்துவர்..."பறிபோன சிசுவின் உயிர்

Update: 2024-01-26 13:38 GMT

கடலூர் மாவட்டம் தொழுதுரை அடுத்த ராமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு கடந்த நவம்பர் மாதம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தைக்கு ஆசன வாயிலில் அடைப்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு பிறந்த மூன்றாவது நாளிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட குழந்தையின் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதாகவும், குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த போதிலும், குழந்தையின் உடல் நிலை அடிக்கடி மோசமானதாகவும் கூறப்படுகிறது. இதில், பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை மாறி மாறி மருத்துவர்கள் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Tags:    

மேலும் செய்திகள்