மொத்த காவுக்கு பின்னணியில் 19வயது இளைஞன் - அதிர்ந்த போலீஸ் கதிகலங்க வைக்கும் `கைலி மாஃபிபா'

Update: 2024-06-25 15:56 GMT

இழவு வீட்டில் சாராயம் விற்றதில் தொடங்கிய அதிகாரிகளின் புலன் விசாரணை, தற்போது கள்ளச்சாராய மாஃபியாக்களை களையெடுக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை முக்கிய குற்றவாளிகளாக 20க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்...

சொகுசு கார்களிலும், கோட் சூட்டுகளிலும் சினிமாவில் வலம் வரும் ட்ரக் மாஃபியாக்கள் போல்.... கைளி கட்டிய சாமானியர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த விஷ சாராய பிசினஸ்தான் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் மிகப்பெரிய ஹைலைட்...

ஆண்டுகணக்கில் சாராயம் விற்று வரும் நான்... இதுவரை ஒரு சொட்டு சாராயம் கூட குடித்ததில்லை என கள்ளக்குறிச்சி கருணாபுரத்தின் சாராய வியாபாரி கோவிந்தராஜ் சிபிசிஐடியிடம் அளித்த வாக்குமூலம் நம் அனைவரின் புருவ நெற்றியையும் ஏறிட்டு பார்க்க செய்த ஒன்று....

கல்வராயன் மலையில் காய்ச்சப்படும் மலைச்சாராயத்திற்கு அதிக முதலீடு தேவை என்பதால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து குறைந்த விலையில் மெத்தனாலை கடத்தி வந்து... தண்ணீரில் கலந்து விஷ சாராயமாக்கி விற்றதாக கோவிந்தராஜின் பாஸ் சின்னதுரை அளித்த வாக்குமூலத்தையும் மறந்து விட முடியாது....

சின்னதுரைக்காக மெத்தனாலை கடத்தி வந்தது யார் ? என துலக்கிய துப்பில்... 19 வயதேயான மாதேஷ் என்ற இளைஞர் சிக்கியதும், தனக்கு பழக்கமான பேக்கரி கடை உரிமையாளரின் ஜி.எஸ்.டி நம்பரையும், பில்லையும் பெற்று ... சென்னையில் உள்ள ஆயில் கம்பெனியையும், போலீசாரையும் அவர் நூதன முறையில் ஏமாற்றி மெத்தனாலை கடத்தியது சினிமாவை மிஞ்சும் சம்பவங்களில் ஒன்று....

தொடர்ந்து, மெத்தனால் பேரல்களை சாக்கடைகளிலும், தங்களுக்கு தெரிந்தவரின் தோட்டங்களிலும் மறைத்து வைத்து வியாரிகளுக்கு சப்ளை செய்து வந்தததாக மாதேஷின் கூட்டாளியும், மீனவருமான கண்ணன் என்பவர் அளித்த வாக்குமூலம் வழக்கை மேலும் தீவிரப்படுத்தியது...

விஷ சாராயத்தால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படவே, பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றில் கொட்டியதாகவும், சுமார் 100 லிட்டர் மெத்தனாலை ஆற்றில் ஊற்றியதால் ஆற்று நீர் கொதிநீராக மாறியதாகவும் கண்ணன் அளித்த வாக்குமூலம் அதிகாரிகளையே அதிரச் செய்தது...

தொடர்ந்து, மெத்தனால் பேரல்களை உருத்தெரியாமல் அழிக்க தீயிட்டு கொளுத்தியபோது, பேரலுக்குள் சில துளிகள் மெத்தனால் இருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டு நான் நூலிழையில் தப்பியதாகவும் கூறி கண்ணன் பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது...

சிபிசிஐடி அதிகாரிகளின் இந்த துரித புலன் விசாரணையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில்... தொடர்ந்து அவர்களின் பின்னணி நோண்டப்பட்டு வருகிறது...

இதனிடையே, இந்த வழக்கில் பிரபல ஆன்லைன் இணையதளம் மூலம் மாதேஷ் மெத்தனால் வாங்கியிருப்பது தெரியவர, மேலும் சில முக்கிய மாஃபியாக்கள் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தமிழக அரசியல் கட்சிகள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது தமிழக அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்